இலங்கை

சவூதி சிறையிலுள்ள அனோஜனுடன் தொலைபேசி மூலம் பேசிய சஜித்;  பெற்றோரிடம் உறுதியளித்த சஜித்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர்கள் நேற்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்குச் சென்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து,தங்கள் மகனின் விடுதலைக்கு உதவுமாறு கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டனர்.

இச்சந்தப்பில் சிவராசா அனோஜனின் தந்தையரான தம்பிராசா சிவராசா, தாயாரான இராசமாணிக்கம் யோகலட்சுமி மற்றும் சகோதரர் சிவராசா ஹம்சிதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகையில்,

அனோஜனின் பெற்றோருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலுக்கு மத்தியில் , இலங்கைக்கான சவூதி அரேபியாவின் தூதுவரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, சிவராசா அனோஜனின் விடுதலை தொடர்பான விடய விபரங்களைக் கேட்டறிந்ததேன்.

மேலும் சவூதி சிறையில் இருக்கும் சிவராசா அனோஜனுடன் தொலைபேசி வழியாக பேசி அவரிடம் விடயங்களைக் கேட்டறிந்த பின்னர் நமது நாட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவரின் விடுதலைக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தேன்.

சாதி, மத பேதமின்றி சிவராசா அனோஜனின் விடுதலைக்காக செய்யக்கூடிய உட்சபட்ச அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என அனோஜனின் பெற்றோரிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *