உலகம்

முதல் முறையாக APEC உச்சிமாநாட்டில் பங்கேற்கும் புட்டின்

ஜனாதிபதி ஜி ஜின்பிங் (Xi Jinping) நடத்தும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில் பங்கேற்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சீனா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்காரணமாக அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்கும் ஜி-20 (G-20) உச்சிமாநாட்டை அவர் தவிர்க்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரெம்ளினுக்கு நெருக்கமான வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2017-க்குப் பிறகு முதல் முறையாக APEC கூட்டத்தில் ரஷ்ய ஜனாதிபதி பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த கருத்து கோரலுக்கு கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov) பதிலளிக்கவில்லை எனவும் ப்ளும்பேர்க் தெரிவித்துள்ளது.

நவம்பர் 18-19 ஆம் திகதிகளில் சீனாவின் ஷென்சென் நகரில் ஏபெக் தலைவர்களை ஷி ஜின்பிங் உபசரிப்பார்.

இந்த உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, உலகின் மூன்று மிகப்பெரிய அணுசக்தி நாடுகளின் தலைவர்களுக்கு இடையே முன்னெப்போதும் இல்லாத ஒரு முத்தரப்புக் கூட்டத்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ரஷ்ய அதிகாரிகள் ஊகித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *