உலகம்

கனடாவில் விமான பயிற்சியில் இரு தமிழ் மாணவர்கள் உயிரிழப்பு

கனடாவில் விமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கனடாவில் கடந்த 18 ஆம் திகதி அதிகாலை ரெஜினாவில் இருந்து கார்லைல் வழியாக ஸ்டெய்ன்பாக், மனிடோபா வரை இரவு நேர பயிற்சியை மேற்கொண்ட போது சஸ்காட்சுவான் அருகே விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விமான விபத்தில் பயணம் செய்த இருவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்துள்ள மாணவர்கள் இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த மனோஜ் சிவகுமார் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீசரன் திருஞானசம்பந்தம் என்பது உறுதி செய்யப்பட்டது.

 

 

 

இது தொடர்பாக கனடாவுக்கான இந்தியத் தூதரகம் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், இந்தக் கடினமான சூழலில், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு துணை நிற்கிறோம்

. மேலும், இருவரின் உடல்களும் இந்தியா கொண்டு செல்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *