ஆஸ்திரேலியாவின் இன்றைய முக்கியச் செய்திகளின் சுருக்கம்

1. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இடத்திற்கு ஆஸ்திரேலியா போட்டி
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீசி, 2029-2030 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UN Security Council) தற்காலிக உறுப்பினர் இடத்திற்கு ஆஸ்திரேலியா போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். காலநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு (AI) கட்டுப்பாடு மற்றும் இணைய பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளதாக அவர் நியூயார்க்கில் தெரிவித்தார்.
2. ஆஸ்திரேலியா – நியூசிலாந்து கடற்படை கூட்டு ஒப்பந்தம்
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து கடற்படைகள் இணைந்து ‘பிளான் டாஸ்மேன்’ (Plan Tasman) என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் இரு நாடுகளின் பாதுகாப்புப் படைகளுக்கிடையேயான பயிற்சிகள் மற்றும் தகவல்கள் பகிர்வு மேலும் விரிவுபடுத்தப்படும்.
3. ரொக்கப் பணப் பரிவர்த்தனை (Cash-in-hand) குறித்து ATO எச்சரிக்கை
ஆஸ்திரேலிய வரிக் அலுவலகம் (ATO), ரொக்கப் பணமாக ஊதியம் பெற்று வரியை மறைக்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எச்சரித்துள்ளது.
4. புளூ மவுண்டன்ஸ் பகுதியில் சோகச் சம்பவம்
சிட்னியின் புளூ மவுண்டன்ஸ் (Blue Mountains) பகுதிக்கு அருகே காரில் கத்திக்குத்து காயங்களுடன் மீட்கப்பட்ட குடும்பத்தில் ஒரு குழந்தை உயிரிழந்தது. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாய் மற்றும் இரு குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
5. விளையாட்டு உலகச் செய்தி (AFL)
AFL அரை இறுதிப் போட்டியில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) நடுவர்கள் மீது பாட்டில்களை வீசி எறிந்த ரசிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை போட்டிகளைக் காணத் தடை விதிக்கப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
![]()