இலங்கை
ராஜபக்சர்களுக்கு தொடரும் ஏமாற்றம் – விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்காக நடத்தப்படவிருந்த போதிப் பூஜை நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது.
நாமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராகவும், அவரது உடல் ஆரோக்கியதற்காகவும் ஆசி வேண்டி போதி பூஜை நடத்தப்படவிருந்தது.
இன்று மாலை 4.00 மணிக்கு மாத்தறை விகாரையில் நடத்தப்படுவதாக இருந்த போதிப் பூஜை நிகழ்வை நடத்த அனுமதி வழங்க முடியாது என மாத்தறை போதிப் பாதுகாப்புச் சபை அறிவித்துள்ளது.
போதிப் பூஜை நிகழ்வு
இந்தப் போதிப் பூஜையை நடத்துவதற்கான அனைத்து அனுமதிகளும் சில நாட்களுக்கு முன்பு பெறப்பட்டிருந்தன.
அதற்கமைய, நாமல் ராஜபக்சவிற்காக நடத்தப்படவிருந்த போதிப் பூஜையை வேறு மத வழிபாட்டுத் தலமொன்றில் நடத்த வேண்டிய நிலை அதன் அமைப்பாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
![]()