உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் ; கப்பல் போக்குவரத்துக்கு புதிய சிக்கலா?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் மற்றும் ஓமானுக்கு இடையே அமைந்துள்ள ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்து தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கடல் வழித்தடமாக ஹோர்முஸ் நீரிணை காணப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, குறித்த கடல் வழித்தடத்தில் சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்ற கவலை உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் ஏற்படும் எந்தவொரு குறிப்பிடத்தக்க இடையூறும் சர்வதேச எரிசக்தி விநியோகம் மற்றும் எண்ணெய் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அப்பகுதியில் நிலவும் நிலைமை சர்வதேச அளவில் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *