பலதும் பத்தும்

கனடாவின் புதிய சாதனை ; நயகரா ஆற்றில் உருவாக்கப்பட்ட இயற்கை வாழ்விடங்கள்

கனடாவில் நயகரா ஆற்றின் கரையோர ஈரநிலங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை அழிவடைந்ததைத் தொடர்ந்து, மீள்சுழற்சி செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் மரக் கழிவுகளை ஆற்றுப் படுகையில் நிலைநிறுத்தி சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம், நயகரா பூங்காக்கள் நிறுவனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் இணைந்து இதுவரை 1.64 கிலோமீற்றர் பரப்பளவில் நீர்வாழ் உயிரினங்களுக்கான இயற்கை வாழ்விடங்களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளன.

மேலும், 2025 கோடை காலத்தில் பிளாக் கிரீக் மற்றும் பொயர்ஸ் கிரீக் நதி முகத்துவாரப் பகுதிகளில் மரக் கட்டமைப்புகள் மற்றும் பாறைகளைப் பயன்படுத்தி மேலதிகமாக 240 மீற்றர் ஈரநிலப் பகுதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையினால் அந்த பகுதிகளில் மீன்கள் மற்றும் கரையோரப் பறவைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதுடன், நீரின் தரமும் மேம்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *