இலங்கை

நாமல் ராஜபக்ஸவை பார்வையிட சிறைக்கு சென்ற மகிந்த, ஷிரந்தி

கொழும்பு மெகசின் விளக்கமறியல் சிறையில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவை அவரது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, தாயாரான ஷிரந்தி ராஜபக்ஸ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சிலர் நேற்று திங்கட்கிழமை சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டனர்.

சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிடும் சாதாரண நடைமுறையின்படி நாமல் ராஜபக்ஸ வை அவர்கள் பார்வையிட்டதாக சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான சேனக்க பள்ளேதென்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை உதய கம்மன்பில, ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட அரசியல்வாதிகள் சிலரும் நாமல் ராஜபக்ஸவை பார்வையிட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *