இலங்கை

மட்டக்களப்பிலும் சிக்கப் போகும் இன்னாள்,முன்னாள் எம்.பி.க்கள்

மட்டக்களப்பு மாவட்ட இன்னாள் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனவே ஊழல் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளில் தொடர்புபட்டவர்கள் தொடர்பாக சட்டம் தன் கடமையை செய்யும் என தேசிய மக்கள் சக்தி எம்.பி கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

மட்டக்களப்பில்  ஊழல் தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவ்ரவ் மேலும் கூறுகையில்

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இன்னாள், முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சட்டத்திற்கு மதிப்பளித்து அனைவரும் செயல்பட வேண்டும் என்பதோடு, விசாரணையின் முடிவில் எட்டப்படும் தீர்மானங்கள் எவ்வித தலையீடுமின்றி நடைமுறைப்படுத்தப்படும்.

சட்ட ஆட்சியை நடைமுறைப்படுத்தும் ஒரு அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம். எனவே ஜனாதிபதி வேட்பாளராக இருந்தவர்கள் ஆளுநராக இருந்தவர்கள் இப்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் அதே சட்டம் பாயும்.

நாமல் ராஜபக்ஸ தற்போது சிறையிலுள்ள நிலையில் சமூகத்தில் பலவிதமான கருத்துக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அதே நேரத்தில் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக இருந்த காலத்தில் ராஜபக்ச குடும்பத்தினரை ‘திருடர்கள்’ என பகிரங்கமாக விமர்சித்தார்.

இவ்வாறு ராஜபக்ஸக்கள் திருடர்கள் என்று சொன்ன ரணில் கடந்த காலத்தில் அவர்களுடன் சேர்ந்து ஆட்சி பீடம் ஏறியதுடன் இன்று அந்த திருடர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றார் ஆகவே இந்த திருட்டுக் கும்பலான மகிந்த ராஜபக்ஸக்களின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க பெறுப்பேற்றுள்ளார் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *