அமெரிக்காவில் ICE முகவர்களின் கீழ் இடம்பெறும் மரணங்கள் தொடர்பில் ஐ.நா சபை அவதானம்

அமெரிக்க குடிவரவுத் துறையினரின் கட்டுப்பாட்டில் இடம்பெறும் மரணங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுமாறு, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தலைவர் இன்று வலியுறுத்தினார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உரையாற்றிய வோல்கர் டர்க் Volker Turk, “ஜூன் மாதத்திற்கு பிறகு, அமெரிக்கக் குடிவரவுக் காவலில் மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி, “2026-ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 23 மரணங்கள் நிகழ்ந்துள்ளன” என்று கூறிய அவர், “இந்த மரணங்களுக்குப் பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சட்டவிரோத குடியேற்றத்தை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர் மக்கள் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்படுகின்றனர்.
இதற்காக ICE முகவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், பல துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()