உலகம்

FIFA தேர்தல் – மீண்டும் போட்டியில் குதித்த கியானி இன்ஃபான்டினோ

பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் FIFA தலைவர் கியானி இன்ஃபான்டினோ அடுத்த ஆண்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த FIFA தேர்தல் வரும் 2027 மார்ச் 18, அன்று மொரோக்கோவில் நடைபெறவுள்ளது.

2027-ல் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக FIFA தலைவர் ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார். நிச்சயமாக, எதுவும் மாறவில்லை. இன்ஃபான்டினோ மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார் என உலக கால்பந்து நிர்வாக அமைப்பு கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் பல செய்தி வெளியிட்டுள்ளன.

2016-ல் முதன்முதலில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இன்ஃபான்டினோ, ஜூலை மாத இறுதியில் FIFA மிகவும் சர்ச்சைக்குரிய தனியார் முதலீட்டுத் திட்டத்தை அறிவித்ததிலிருந்து பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.

அந்தத் திட்டத்தின்படி, FIFA ஃபார்வர்ட் எண்டர்பிரைஸ் (FFE) என்று அழைக்கப்படும் ஒரு வணிக துணை நிறுவனத்தில் பங்குகளைப் பெறுவதற்காக மூன்றாம் தரப்பு முதலீட்டாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த முன்மொழிவு கால்பந்து சமூகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பை ஈர்த்தது, சிலர் FIFA இந்த விளையாட்டை “விற்க” முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினர்.

இந்த ஒரு விவகாரத்தில மிகப் பெரிய அளவில் சர்ச்சை வெடித்ததுடன், இன்ஃபான்டினோ பதவி விலகுவது குறித்தும் கருத்து முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *