இலங்கை

நாமலின் கைதை கண்டித்து ஐ.தே.க அறிக்கை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அக்கட்சி, வரும் 12 ஆம் திகதி அனுராதபுரம் நகரில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியை சீர்குலைப்பதே இதன் நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவிற்கு நாடு முழுவதும் சென்று கூட்டங்களை நடத்துவதற்கு இருக்கும் ஜனநாயக உரிமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கும் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *