நான் பெயரை மாற்றவில்லை; அமைச்சர் கூறியது பொய்- அர்ஜுன மகேந்திரன்

தான் சட்டப்பூர்வமாக பெயரை மாற்றியுள்ளதாக அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் தெரிவித்த கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில செய்தி இணையதளமொன்றுக்கு கடிதமொன்றை அனுப்பி அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளதாக அந்த இணையதள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது பெயர் மாற்றப்பட்டுள்ளதாக நாட்டின் முக்கிய அமைச்சர் ஒருவர் கூறிய கருத்து உண்மையற்றது எனவும், அந்தக் குற்றச்சாட்டை தான் மறுப்பதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்குடன் தொடர்புடைய முன்னாள் மத்திய வங்கி ஆளுநரை வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் காணப்படுவதாகவும், அவர் “ஹர்ஜான் அலெக்சாண்டர்” என தனது பெயரை மாற்றியுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அண்மையில் தெரிவித்திருந்த நிலையிலேயே, அர்ஜுன மகேந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.
![]()