இலங்கை

கோட்டாபய நுவரவெவ குளத்தை நிரப்பி கட்டிய சொகுசு ஹோட்டல்!; ஓய்வுநிலை விரிவுரையாளர் வெளிப்படுத்திய தகவல்கள்

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அவருக்கு ஆலோசனை வழங்கிய ஒருவர் இருந்ததாகவும், அவரின் ஆலோசனைகளுக்கு அமையவே கோட்டாபய ராஜபக்ச நாட்டை ஆட்சி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்சவின் பல்வேறு செயற்பாடுகளும் குறித்த பெண்ணின் ஆலோசனைகளுக்கு அமையவே இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

அமைச்சரவை நியமனம், சில அமைச்சர்களை பதவிகளில் இருந்து நீக்கியமை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் அவரது ஆலோசனைப்படியே மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் எவ்வாறு உறங்க வேண்டும் என்பதுகூட அந்தப் பெண்ணின் ஆலோசனைக்கு அமையவே தீர்மானிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடப்படும் பெண், அனுராதபுரத்தில் சோதிடம் பார்த்து பிரபலமான ‘ஞானக்கா’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞானக்காவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் சொகுசு ஹோட்டல் ஒன்று, அனுராதபுரத்தில் நுவரவெவ குளத்தை நிரப்பி அமைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்களை ருஹுணு பல்கலைக்கழகத்தின்  ஓய்வுநிலை விரிவுரையாளரும்,  பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், இலங்கை புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் முன்னாள் ஊடகப் பணிப்பாளருமான சந்தன காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்கள்

அந்த அம்மையார் ஹோட்டல் கட்டினால் உனக்கென்ன எங்களுக்கு என்ன என்று கேள்வி எழலாம் அல்லவா? ஆனால் 2300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நுவரவௌ குளத்தை அழித்துள்ளார்கள்.

இது எங்களுடைய உரிமைச் சொத்து அதைத்தான் இவர்கள் நாசப்படுத்தியுள்ளனர்.

நுவரவெவ எல்லைப் பகுதியில்தான் இந்த ஹோட்டலின் பெரும்பாலான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இது முற்றிலும் சட்டவிரோதமான செயல் அப்படிச் செய்ய முடியாது. குளத்தின் எல்லைப் பகுதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர். ஒரு சாதாரண மனிதரால் இதைச் செய்ய முடியாது.

கோட்டாபய ராஜபக்ச நுவரவெவ குளத்தை நிரப்பி கட்டிய சொகுசு ஹோட்டல்! ஓய்வுநிலை விரிவுரையாளர் வெளிப்படுத்திய தகவல்கள் | Gotabaya Rajapaksa Anuradhapura

நாட்டுத் தலைவரின் அரசியல் செல்வாக்கைக் கொண்டுதான் இவற்றை நிரப்பி இந்த நிலைக்குக் கட்டியிருக்கிறார்கள்.மேலும் கோட்டாபய ராஜபக்ச பணம் வழங்கியதாகவும் ஒரு கதையும் உள்ளது. இந்த அம்மையார் ஹோட்டல் கட்டினாரா அல்லது கோட்டாபயவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாரா என்பது நமக்கு முக்கியமல்ல.

ஆனால் இந்த விடயங்கள் இப்படி நடக்க முடியாது. கடந்த காலத்தில் குளத்தின் கரையோரங்களில் அல்லது குளத்திற்குள் கட்டப்பட்ட ஹோட்டல்களை அகற்றும் திட்டம் ஒன்று நடந்தது. அதற்கும் நிறைய பிரச்சினைகள் வந்தன.ஆனால் அநுராதபுரத்திலுள்ள இந்த ஹோட்டலுக்கு ஒன்றும் நடக்கவில்லை. அதனால் அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த ஹோட்டல் புதிதாக அமைக்கப்பட்ட கண்டி – அனுராதபுர வீதியில் இராணுவ மருத்துவப் படைப்பிரிவை கடந்து சில மீட்டர்கள் செல்லும் போது உள்ளது. அநுராதபுரத்தில் சோதிடம் பார்த்த சாதாரண ஒரு பெண் இப்போது கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருப்பது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button