இலங்கை

மூன்று முறை சீ.வி.கேவின் வீடு தேடி சென்ற தாய் வெளியிட்ட பகீர் தகவல்!

இலங்கையின் படை தரப்பினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவகளுக்காக நீதி கோரி போராட்டமும் மகாநாடும் கடந்த ஆவணி மாதம் 30ஆம் திகதி தமிழர் பகுதிகளில் உணர்ச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நியாயவழி போராட்டத்திற்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று சிறுபிள்ளைதனமான காரணத்தை கூறி இலங்கை தமிழரசுக் கட்சி போராட்டம் மற்றும் மகா நாட்டை புறக்கணித்துள்ளது.

இது தொடர்பில் கட்சியின் பதில் தலைவர் சி. வி. கே. சிவஞானமும் பதில் செயலாளர் எம். ஏ. சுமந்திரனும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த தமிழினத்தின் நீதிக்கான குரலை மழுங்கடிக்கும் வகையில் அமைந்திருந்த இந்த அறிக்கை மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பான போராட்டங்களுக்கு அரசு தரப்பில் பல தடைகள் விதிக்கப்பட்டன.

ஆனால் தற்பொழுது தமிழ் கட்சிகள் தரப்பே இவ்வாறான காரணங்களை கூறி தமிழர்களின் உணர்வுபூர்மான போராட்டங்களை புறக்கணிக்கின்றன.

இவ்வாறிருக்கையில், வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் உபதலைவி அமலநாயகி, சி. வி. கே. சிவஞானத்தை சந்திக்க பலமுறை முயற்சித்தமை தொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button