உலகம்

நேட்டோ தரத்திலான ஒப்பந்தத்தை தொடர்ந்து முதலாவது கூட்டத்தை நடத்தும் இஸ்லாமிய நாடுகள்

துருக்கி, சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் உயர் அதிகாரிகள் நாளைய தினம் முதலாவது கூட்டத்தை நடத்தவுள்ளதாக துருக்கி வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

குறித்த மூன்று நாடுகளும் ஒன்றிணைந்து நேட்டோ தரத்திலான பாதுகாப்பு ஒப்பந்ததில் கையெழுத்திட்டத்தை தொடர்ந்து முதலாவது கூட்டத்தை இஸ்தான்புலில் நடத்துகின்றன.

இந்தக் கூட்டத்தில், மூன்று நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் படைத் தலைமைத் தளபதிகள் கலந்துகொள்வார்கள் என்று அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.

“சர்வதேசப் பாதுகாப்புப் பிரச்சினைகள் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும்,” என்று அந்த வட்டாரம் கூறியது.

பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துதல், தங்கள் ஆயுதப் படைகளுக்கு இடையே அதிக ஒருங்கிணைப்புத் திறன் மற்றும் கூட்டு உற்பத்தி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துதல் ஆகியவை குறித்த விவாதங்கள் நடத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 7 அன்று கையெழுத்திடப்பட்ட மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம், நேட்டோவின் பிரிவு 5 கூட்டுப் பாதுகாப்புப் பிரிவைப் போலவே, இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீதான ஆயுதத் தாக்குதல், அனைத்து நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் எனக் குறிப்பிடுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button