இலங்கை

இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற 236 குற்றவாளிகளைத் தேடுகிறது “இன்ரபோல்”

இலங்கையில் செயற்பட்ட பாதாள உலக உறுப்பினர்கள் உள்ளிட்ட 236 குற்றவாளிகளுக்கு இன்ரபோல் ஊடாக சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

236 குற்றவாளிகளில் 110 பேருக்கு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரே சிவப்பு அறிவித்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

சிவப்பு அறிவித்தல்கள் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளில் 66 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் 97 சந்தேக நபர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர்களில் 39 பேர் தங்கியுள்ள நாடுகள் மற்றும் இடங்கள் குறித்த தெளிவான தகவல்கள் உள்ளது. எதிர்வரும் வாரத்தில் அவர்களில் ஒருவர் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button