உலகம்

ஃபாக்லாந்து தீவுகளுக்கான ஆதரவை திரும்பப்பெற அமெரிக்கா பரிசீலனை

பிரித்தானியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட ஃபாக்லாந்து Falkland தீவுகளுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆதரவை திரும்பப் பெற ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது.

பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிக்க பிரித்தானியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

பென்டகன் அதிகாரிகள் நேட்டோ கூட்டாளிகளின் பாதுகாப்பு உறுதிமொழிகளை மறுஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பில் பிரித்தானியாவிற்கு கூடுதல் அழுத்தம் கொடுக்க அல்லது பிரித்தானியா கூடுதலாக நிதி ஒதுக்க ஊக்குவிப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவத்துள்ளார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்தைப் பாதுகாப்புக்கு ஒதுக்கும் தனது இலக்கை நாடு எப்போது அடையும் என்பதை பிரிட்டன் கருவூலத்தின் வரவுசெலவுத் திட்டம் குறிப்பிடத் தவறும் என தகவல்கள் வெளியாகியதை தொடர்ந்து அமெரிக்கா இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button