பலதும் பத்தும்

பிரபஞ்சத்தின் மிகப்பெரிய மர்மங்களை தீர்க்க நாசா முயற்சி – தயாராகும் விண்வெளி ஆய்வகம்

நாசா தனது அடுத்த முதன்மை விண்வெளி ஆய்வகத்தை ஏவுவதற்குத் தயாராகி வருகிறது.

விஞ்ஞானிகள் இந்த ஆய்வகத்தைப் பயன்படுத்தி, பிரபஞ்சத்தின் மிகப்பெரிய மர்மங்களான கரு ஆற்றல் மற்றும் கருப்பொருள் போன்றவற்றை ஆராயவும், அதே நேரத்தில் பரந்த அளவில் ஈர்ப்பு விசையைச் சோதிக்கவும், நமது சூரிய மண்டலத்திற்கு அப்பால் உள்ள கோள்களைத் தேடவும் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது,

சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் மேற்கொள்ளப்படும் இந்த ஏவுதல் திட்டம் வரும் 30 ஆம் திகதி புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. ,

இந்த ஆய்வகம், ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் ஹெவி ரொக்கெட் மூலம் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட உள்ளது.

அதேநேரம் இந்த ஏவுதல் திட்டமிடப்பட்ட காலத்திற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்னதாகவே நடைபெறுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *