உலகம்

பழிக்குப் பழி – உக்ரைனின் பொருளாதார கட்டமைப்பை குறிவைக்கும் புட்டின்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைனின் முக்கிய பொருளாதார உள்கட்டமைப்புகளுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

மேலும், ரஷ்யாவின் பொருளாதார வசதிகளைக் குறிவைப்பதன் மூலம் கீவ் பண்டோரா பெட்டியை “Pandora’s box திறந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், கிடங்குகள் மற்றும் பிற பொருளாதார சொத்துக்கள் மீது உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், புடினின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள புட்டின், “கீவ் ஆட்சி நமது பொருளாதாரத்தைச் சேதப்படுத்தத் திட்டமிட்டது. அது என்ன செய்தது? இந்த பாண்டோரா பெட்டியை அதுவே திறந்துவிட்டது. சரி, அப்படியானால், உங்களின் மிகவும் உணர்திறன் வாய்ந்த பொருளாதாரத் துறைகளைக் குறிவைக்கும் ஒரு பதிலடியை எதிர்பார்க்கலாம்,” என்று தெரிவித்ததாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியுடன் தொடர்புடைய வசதிகள் உட்பட, உக்ரைனின் பொருளாதார உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களையும் ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல்கள், விவசாயப் பொருட்களை அனுப்பும் உக்ரைனின் திறன் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button