உலகம்

உன் நாட்டுக்குத் திரும்பிப்போ… இந்தியரை இனரீதியாக விமர்சித்த கனேடியர்

கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் இந்தியர் ஒருவர் இனவெறுப்புச் சம்பவம் ஒன்றை எதிர்கொண்டுள்ளார்.

கனடாவில் வாழ்ந்துவரும் இந்தியர் ஒருவர் இனவெறுப்புச் சம்பவம் ஒன்றை எதிர்கொண்ட நிலையில், முதன்முறையாக தனக்கு அச்சம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் வாழ்ந்துவரும் ஷாலு ஷாஜன் என்னும் இந்தியர், கடைக்குச் செல்வதற்காக தனது காரை சாலையோரமாக நிறுத்தியுள்ளார்.

அப்போது அவ்வழியே வந்த கனேடியர் ஒருவர், தன் கையில் வைத்திருந்த bagpipes என்னும் கருவியைக் கொண்டு ஷாஜனின் கார் கண்ணாடியில் இடித்துள்ளார்.

காரிலிருந்து இறங்கிய ஷாஜன் என் கார் கண்ணாடியில் இடித்துவிட்டீர்கள் என அந்த நபரிடம் கூற, அந்த நபர் திரும்பிவந்து வேண்டுமென்றே காரின் பின்பக்கத்தில் அந்தக் அக்கருவியைக் கொண்டு ஓங்கி அடித்துள்ளார்.

இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, ஷாஜனை இனரீதியாக விமர்சிக்கத் துவங்கிய அந்த நபர், உன் நாட்டுக்குத் திரும்பிப் போ என சத்தமிட்டுள்ளார்.

அந்த நபர் தன் மீது இனவெறுப்புக் காட்டுகிறார் என்பது ஷாஜனுக்குத் தெளிவான நிலையில், அவர் நடந்துகொண்ட விதம் கைகலப்பில் முடிந்துவிடுமோ என தான் அஞ்சியதாக தெரிவிக்கிறார் ஷாஜன்.

பின்னர் அந்த நபரை தான் புகைப்படம் எடுத்ததுடன், பொலிசிலும் புகாரளித்துள்ளதாக தெரிவிக்கிறார் ஷாஜன்.

கனடாவைப் பொருத்தவரை, தெற்காசியர்களுக்கு எதிரான இனவெறுப்பு சம்பவங்கள் அதிகரித்துவருவதாக கனடா புள்ளியியல் அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

விடயம் என்னவென்றால், தான் இதற்கு முன்பும் இதேபோல இனவெறுப்பை எதிர்கொண்டதுண்டு. ஆனால், தான் தாக்கப்படுவேனோ என பயந்தது இதுதான் முதல் முறை என்கிறார் ஷாஜன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button