இந்தியா

“தமிழ் தேசிய களத்​தில் தவெக​வும் விசிக​வும் இணைந்தே இனி பயணிக்​கும்”

தமிழ் தேசிய களத்​தில் தவெக​வும் விசிக​வும் இணைந்தே இனி பயணிக்​கும் என விசிக தலை​வர் திருமாவளவன் அறி​வித்​துள்​ளார்.

விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சி​யின் தலை​வர் திரு​மாவளவனின் பிறந்​த​நாளான நேற்​று, அக்​கட்​சி​யின் சார்​பில் கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் உளுந்​தூர்​பேட்​டை​யில் ‘தமிழ் தேசிய எழுச்சி மாநாடு’ நடை​பெற்​றது.

மாநாட்​டுக்கு தலைமை வகித்த திரு​மாவளவன் தனது பேச்​சின் தொடக்​கத்​தில், தனக்கு பிறந்​த​நாள் வாழ்த்து தெரி​வித்த முதல்​வர் விஜய், திமுக தலை​வர் மு.க.ஸ்டா​லின், நடிகர் ரஜினி​காந்த், தமிழீழ விடு​தலைப் புலிகள் அமைப்​பைச் சேர்ந்த ஈழவேந்​தன், நடிகர்​கள் சத்​ய​ராஜ், ராம​ராஜன் ஆகியோ​ருக்கு நன்றி தெரி​வித்​தார்.

பின்​னர் மாநாட்டு தீர்​மானங்​களில் சில​வற்றை வாசித்​தார்.

“சாதி ஒழிப்​பு, மதச்​சார்​பின்​மை, சுதந்​திரம், சமத்​து​வம், சகோ​தரத்​து​வம் ஆகிய அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின் அடிப்​படை கொள்​கைகளையே தமிழ் தேசி​யத்​தின் அடித்​தள​மாகக் கொண்டு செயல்பட வேண்​டும்.

சாதி​யை​யும், சாதி​யத்தை பாது​காக்​கும் மதவாதத்​தை​யும் எதிர்த்​து, அனை​வருக்​கும், சம உரிமை, சமூக நீதியை உறுதி செய்​யும் தமிழ் தேசிய அரசி​யலை முன்​னெடுக்க இந்த மாநாடு உறு​தி​யேற்​கிறது.

தமிழர்​களின் மொழி உரிமை, இன உரிமை பண்​பாட்டு உரிமை மற்​றும் அரசி​யல் உரிமை​களை பாது​காக்​கும் வகை​யில் தமிழ்​நாட்​டுக்கு உண்​மை​யான மாநில சுயாட்​சியை உறுதி செய்ய வேண்​டும்.

கல்வி பொருளா​தா​ரம் நிர்​வாகம், கலை இலக்​கி​யம் பண்​பாட்டு உள்​ளிட்ட அனைத்து துறை​களி​லும் மாநிலங்​களின் அதி​காரத்தை விரிவுப்​படுத்​தும் அரசமைப்​புச் சட்​டத்​தில் திருத்​தங்​களை மேற்​கொள்ள மத்​திய அரசை இம்​மா​நாடு வலி​யுறுத்துகிறது.

விசிக மாநாட்டுக்காக காலை 11 மணி முதலே தொண்டர்கள் உளுந்தூர்பேட்டையில் குவியத் தொடங்கினர். மாலை 4 மணிக்கு மாநாட்டு மேடைக்கு திருமாவளவன் வந்த போது மேடையில் இருந்து தொண்டர்களை சந்திப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த ‘ரேம்ப்’ பகுதியை தொண்டர்கள் முற்றிலுமாக ஆக்கிரமித்தனர்.

அவர்களை கட்டுப்படுத்த நேரடியாக திருமாவளவனே கீழே இறங்கினார். தொண்டர்கள் அவரது கையையும், காலையும் பிடித்துக் கொண்டு விட மறுத்தனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த திருமாவளவன் அவர்களை அதட்டியும் பிடித்து தள்ளியும் அங்கிருந்து அகற்ற முயன்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button