பலதும் பத்தும்

ஜெமினியின் புதிய சாதனை

கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு உரையாடல் செயலியான ‘ஜெமினி’ குறுகிய காலத்திலேயே 100 கோடி பயனர்களை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளின் தயாரிப்புகளில் மிக வேகமாக இந்த எண்ணிக்கையை எட்டிய தயாரிப்பாக ஜெமினி மாறியுள்ளது. பயனர்கள் தகவல்களைப் பெறுவது மட்டுமின்றி, உரையாடுதல், ஆலோசனை பெறுதல், படங்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் ஜெமினியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஜெமினி பயனர்களில் சுமார் 63 சதவீதம் பேர் தங்களது கேள்விகளை தட்டச்சு செய்வதற்குப் பதிலாக குரல் மூலம் கேள்விகளை முன்வைத்து பதில்களைப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜெமினி மூலம் தினசரி 15 கோடிக்கும் அதிகமான செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய படங்கள் உருவாக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமானோர் ஜெமினி சேவையைப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button