பலதும் பத்தும்

நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடுகள்

சில நாடுகளில் நள்ளிரவிலும் வானத்தில் சூரியன் தொடர்ந்து பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இது கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

ஆனால், உலகில் கோடை காலத்தில் பல நாட்கள் அல்லது வாரங்களுக்கு சூரியன் மறையாத நாடுகளும் நகரங்களும் இருக்கின்றன. இந்த இயற்கை நிகழ்வை நள்ளிரவு சூரியன் என்று அழைக்கப்படுகிறது. இது முக்கியமாக ஆர்க்டிக் வட்டத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் காணப்படுகிறது.

நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடுகள் | 5 Places Where Sun Never Set At Midnight

1.டிரோம்சோ, நார்வே:

நார்வேயில் உள்ள டிரோம்சோ நகரம் நள்ளிரவு சூரியன் நிகழ்வை காண்பதற்கு உலகில் உள்ள முக்கியமான மற்றும் பிரபலமான இடங்களில் ஒன்றாகும். கிட்டத்தட்ட மே முதல் ஜூலை வரை இங்கு 24 மணி நேரமும் சூரியனை நாம் பார்க்கலாம்.

பனி சூழ்ந்த மலைகள் நீலக்கடல் மற்றும் இடைவிடாத ஒளியில் நனைந்திருக்கும் நிலப்பரப்பு ஆகியவை இதனை இன்னும் பிரமிக்க வைத்த இடமாக மாற்றுகிறது.

2. ஸ்வால்பார்ட், நார்வே:

ஆர்க்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஸ்வால்பார்ட், உலகின் வடகொோடியில் உள்ள மக்கள் வசிக்கக்கூடிய இடங்களில் ஒன்றாகும்.

இங்கு ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரையிலும் சூரியன் அஸ்தமிப்பதில்லை. மேலும், இந்த இடம் அதனுடைய பனியாறுகள், பனிப் பரப்புகள் மற்றும் துருவக் கரடிகளுக்காகப் மிகவும் புகழ் பெற்றது.

நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடுகள் | 5 Places Where Sun Never Set At Midnight

3. ரெய்க்யவிக், ஐஸ்லாந்து:

ஐஸ்லாந்தில் தலைநகரமாக இருக்கக்கூடிய ரெய்க்யவிக்கில் இரவுகள் மிகவும் குறுகியவை ஆகும். இங்கு ஜூன் மாதம் நள்ளிரவில் கூட பகல் மிகவும் வெளிச்சகமாக இருக்கும். நீர்வீழ்ச்சிகள் இயற்கையான வெந்நீர் ஊற்றுகள். இதனை சுற்றுலா பயணிகளுக்கு இன்னும் ஒரு பிரபலமாக மற்றும் கவரும் இடமாக மாறி இருக்கிறது.

4. நுனாவட், கனடா:

கனடாவின் நுனாவட் பகுதி ஆர்க்டிக் வட்டத்திற்குள் அமைந்துள்ளது. இந்த இடத்தில் சூரியன் நீண்ட நேரம் தொடர்ச்சியாக பிரகாசிக்கிறது. பிரம்மிக்க வைக்க கூடிய இயற்கை பல சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கிறது.

நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடுகள் | 5 Places Where Sun Never Set At Midnight

 

4. ஃபேர்பேங்க்ஸ், அலாஸ்கா (அமெரிக்கா):

அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள ஃபேர்பேங்க்ஸ் நகரமும் நள்ளிரவு சூரியனுக்காக மிகவும் புகழ்பெற்றது. இங்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இரவு நேரம் கிட்டத்தட்ட முழுமையாக பகல் வெளிச்சம் போல் காணப்படுகிறது. இங்கு மலை ஏற்றம் மீன் பிடித்தல் போன்ற சுற்றுலா நடவடிக்கைகளை நாம் இரவில் கூட அனுபவித்து மகிழ்ச்சியாக நேரம் செலவிடலாம்.

எதற்காக இருள் சூழ்வதில்லை:

பூமி அதன் அச்சில் சுமார் 23.5 பாகை சாய்ந்துள்ளது. இதனால் துருவங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் சூரியன் அடிவானத்திற்கு கீழே மறையாமல் பல நாட்கள் தொடர்ந்து காட்சி கொடுக்கிறது. இதனால் தான் இந்த இடங்களில் சில காலங்களில் சூரியன் நீண்ட நாட்களுக்கு மறையாமல் தெரிகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button