பலதும் பத்தும்

சமூக வலைதளங்களில் வைரலான மோடியின் ‘திமாகி நக்சல்கள்’!

பிரதமர் மோடி பயன்படுத்திய திமாகி நக்சல்கள் என்ற சொல்லாடல் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

நாட்டின் 80வது சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி முக்கிய வார்த்தை பதத்தை பயன்படுத்தி இருக்கிறார்.

அவர் பயன்படுத்தி அந்த சொல்லாடல் திமாகி நக்சல் (Dimagi Naxals). திமாக் என்றால் ஹிந்தியில் அறிவு என அர்த்தமாகும். திமாகி நக்சல் என்றால் அறிவுஜீவி நக்சல் என்பது பொருள்.

நக்சல்கள் என்றாலே ஆயுத போராட்டத்தை முன் எடுத்தவர்கள் என்ற அடையாளம் இருக்க, அதென்ன அறிவுஜீவி நக்சல் என பலரும், பிரதமர் மோடியின் உரையைத் தொடர்ந்து இணையதளத்தில் ஊருடுவி தெரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

அதனால் திமாகி நக்சல்கள் என்ற வார்த்தை இப்போது இணையத்தில் மட்டுமல்லாது அரசியல்தளத்தில் அதிகளவில் பேசுபொருளாகி இருக்கிறது.

இந்த சொல்லாடலை பிரதமர் மோடி பயன்படுத்திய பின்னர், அதை இணைய பக்கங்களின் தேடுவோரின் எண்ணிக்கையும் அதிகமாகவே காணப்படுகிறது. ஆயுதம் ஏந்திய நக்சலிசம் என்ற பதம் முடிவுக்கு வந்துவிட்ட சூழலில், ஆயுதங்கள் இன்றி அறிவுசார்ந்து, இளைஞர்களை திசை திருப்பி அல்லது குழப்புவர்களே தான் இந்த திமாகி நக்சல்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button