பலதும் பத்தும்

பனிக்கரடியின் தூக்கத்தை கலைத்ததால் அபராதம்; கப்பல் உரிமையாளர் அதிர்ச்சி

நோர்வேவுக்கு சொந்த மான தீவுக்கூடமான ஸ்வால்பார்ட் கடற்கரை பகுதி வழியாக சமீபத்தில் சுற்றுலாப்பயணியர் கப்பல் சென்றது.

அப்போது கப்பலில் இருந்தவர்கள், கரையில் பனிக்கரடி ஒன்று ஓய்வெடுப்பதை கண்டனர். அவர்கள் அக்கரடி நகர்வதை பார்க்க விரும்பியதையடுத்து, கப்பல் உரிமையாளர் ஒருவர் மூடுபனியின் போது, எச்சரிக்கைக்காக ஒலிக்க செய்யும் கப்பலின் ‘பாக் ஒலியை’ ஒலிக்கச் செய்தார்.

இச்சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த கரடி அங்கிருந்து பயந்து ஓடியது. இச்சம்பவம் குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

ஸ்வால் பார்ட் கவர்னரான லார்ஸ் பவுஸ், பனிக்கரடிக்கு தொந்தரவு கொடுத்த கப்பல் உரிமையாளருக்கு, ஐந்து இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். இந்த அபராதத்தால் கப்பல் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்.

ஸ்வால்பார்ட் பகுதியின், 1972ம் ஆண்டு சுற்றுச்சூழல் சட்டத்தின்படி, பனிக்கரடியை தேவையற்ற முறையில் அல்லது தொந்தரவு செய்வது, துரத்துவது குற்றமாகும்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button