இலங்கை

செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரும், “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம் முன்னெடுப்பு!

செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரும், “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம் யாழ்.செம்மணியில் அமைந்துள்ள நினைவுத் தூபி அருகில் ஆரம்பமாகியது.

தாயகச் செயலணியின் ஏற்பாட்டில், நினைவுத்தூபி முன்பாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுத்தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் காணாமற் போனவர்களின் உறவினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

செம்மணி புதைகுழிக்கு நீதிகோரி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்த போராட்டம், எதிர்வரும் 16 ஆம் திகதி வரை செம்மணியில் இரவு பகலாக இடம்பெறவுள்ளதோடு, 17 ஆம் திகதி யாழ்.நகரில் போராட்டம் ஆரம்பித்து நல்லூர் கோயில் வீதியிலுள்ள ஐநா அலுவலகத்தில் மகஜர் கையளிப்பதோடு நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button