உலகம்

ஜப்பான் உரிமைக் கோரும் சர்ச்சைக்குரிய தீவுக்கு புட்டின் விஜயம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஜப்பான் உரிமை கோரும் தீவான இடுருப்பிற்கு (Iturup) இன்றைய தினம்  களவிஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்தத் தீவுத் தொடருக்கு புதின் நேரில் மேற்கொண்ட முதல் பயணம் இது என அரசு செய்தி நிறுவனமான டாஸ் (TASS) விவரித்தது.

இந்தப் பயணத்தின்போது, ​​ரஷ்யாவின் தூரக் கிழக்கில் நடைபெற்ற கடற்படைப் பயிற்சிகளை மேற்பார்வையிட்ட பின்னர், அவர் இடுருப்பில் உள்ள யாஸ்னி மீன் பதப்படுத்தும் ஆலையைப் பார்வையிட்டுள்ளார்.

இதற்கடையே ஜப்பானின் வெளியுறவு அமைச்சர் X தளத்தில் புட்டினின் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

எட்டோரோஃபு உட்பட வடக்குப் பகுதிகள், வரலாற்று ரீதியாகவும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலும் ஜப்பானின் உள்ளார்ந்த நிலப்பரப்பாகும்,” என்று கூறிய அவர் புட்டினின் விஜயத்திற்கு கடுமையான எதிர்ப்பினை பதிவிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button