உலகம்

ட்ரம்ப்பிற்கு எதிராக நெதன்யாகு எடுத்துள்ள அதிரடி முடிவு

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது உள்நாட்டு அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்க்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளமை உகல நாடுகளில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத் தகவலை சவூதி அரேபியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதரும் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தின் சார்ஜ் டி அஃபேர்ஸாகப் பணியாற்றியவருமான மைக்கேல் ராட்னி தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்பிடமிருந்து எத்தகைய எதிர்வினை வந்தாலும் அதை எதிர்கொள்வதை விட, அத்திட்டத்தைப் பகிரங்கமாக நிராகரிப்பதே தனக்கு நல்லது என்று அவர் கணக்கிடுகிறார் என நான் நினைக்கிறேன் என்று ராட்னி தெரிவித்துள்ளார்.

இது முதன்மையாக அடுத்த சில மாதங்களில் வரவுள்ள நெதன்யாகுவின் தேர்தல் வாய்ப்புகள் பற்றியது என்று அவர் மேலும் கூறினார்.

ட்ரம்ப்புடன் அவருக்குள்ள உறவு எப்படியிருந்தது அல்லது இந்தத் திட்டத்தின் சில அம்சங்களை அவர் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்வார் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமான விடயங்கள் என்றும் தனது வாக்காளர்களுக்கு அவர் பொதுவெளியில் என்ன சொல்கிறார் என்பதுதான் அவருக்கு இப்போது முக்கியம் என்றும் ராட்னி தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button