அதானிக்கு எதிரான குற்றவியல் வழக்கை கைவிட்ட அமெரிக்க நீதிமன்றம்!

இந்தியப் பெரும் கோடீஸ்வரரான கௌதம் அதானி மீதான குற்றவியல் வழக்குகளை அமெரிக்க நீதிபதி ஒருவர் திங்களன்று (10) தள்ளுபடி செய்தார்.
இருப்பினும், மோசடி மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை கைவிட நீதித்துறை எடுத்த முடிவு கவலைக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலஞ்சம் மற்றும் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து, 2024 நவம்பரில் நியூயோர்க் கூட்டாட்சி நீதிமன்றம் ஒன்றில் அதானி மற்றும் ஏழு பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
அதானி குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றாகும்.
இது நாட்டின் பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளான துறைமுகங்கள் முதல் சீமெந்து வரையிலும், எரிசக்தி முதல் ஊடகம் வரையிலும் குறிப்பிடத்தக்க அளவில் தனது இருப்பைக் கொண்டுள்ளது.
சூரிய ஆற்றல் விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை இலஞ்சமாகக் கொடுத்ததாகவும், பில்லியன் கணக்கான டொலர்களைத் திரட்டுவதற்காக அமெரிக்க முதலீட்டாளர்களையும் வங்கிகளையும் தவறாக வழிநடத்தியதாகவும், மேலும் நீதிக்கு இடையூறு விளைவித்ததாகவும் அரசுத் தரப்பு அமெரிக்காவின் சட்த்தரணிகள் குற்றம் சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
![]()