கவிதைகள்

கல்வியினால் வென்றிடுவாய்க் கற்று!…  கவிதை… அன்பு ஜெயா, சிட்னி

பா வகை: நேரிசைக் கலிவெண்பா

காலம் எவருக்கும் காத்திருத்தல் இல்லையே
காலத்தில் நீயுமே கற்றிடு – காலம்
எதற்குமே காத்திருத்தல் என்றுமே இல்லை
அதற்குமுன் கற்றலில் ஆழ்ந்தால் – உதவிடும்
கல்வியும் உன்னைக் கரைசேர்க்கும் – உண்மையில்
கல்வியே என்றுமுனைக் காத்திடும் – கல்விகற்றோர்
வாழ்வில் சிறப்புமே வந்துடன் சேர்ந்திடும்
வாழ்வினில் வென்று வளமும் – பெறுவரே
கல்வியில் வென்றவர் காண்பதென்றும் வெற்றியே
கல்விதான் வாழ்விற்கே காட்டிடும் – நல்வழி
நல்லதோர் வாழ்வும் நலமுடன் கூடிடும்
நல்லவர் நட்புமே நாளும் – நலம்தரும்
கல்விக்கே எல்லையைக் கண்டவர் இல்லையே
கல்வியினால் வென்றிடுவாய் கற்று!

அன்பு ஜெயா, சிட்னி

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button