பலதும் பத்தும்

நிலவில் விழுந்து நொறுங்கிய SpaceX ராக்கெட்: 8,690 கி.மீ வேக மோதலால் உருவான புதிய பள்ளம்!

Defunct SpaceX rocket : எலான் மாஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட்டின் மேல் பகுதி, மணிக்கு சுமார் 8,690 கி.மீ வேகத்தில் நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைராலாகி வருகின்றது.

சுமார் 4,000 கிலோ எடையுள்ள இந்த ராக்கெட் பாகம் மோதியதில், நிலவில் 20 முதல் 30 மீட்டர் அகலமுள்ள புதிய பள்ளம் உருவாகியுள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலவில் ஏற்பட்ட பள்ளம்

கடந்த 2025 ஜனவரியில் நிலவு ஆய்வு விண்கலங்களை அனுப்பிய பால்கன் 9 ராக்கெட்டின் இரண்டாம் பகுதி, தனது பணியை முடித்த பின்னர் விண்வெளியில் கட்டுப்பாடின்றி சுற்றி வந்தது.

சூரியனின் ஈர்ப்பு விசை உள்ளிட்ட காரணங்களால் அதன் பாதை மாறி, இறுதியில் நிலவை நோக்கி நகர்ந்து மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவின் வடமேற்குப் பகுதியில் உள்ள ‘ஐன்ஸ்டீன் பள்ளம்’ அருகே இந்த மோதல் நிகழ்ந்துள்ளது. சுமார் 3 டன் டி.என்.டி வெடிப்புக்கு சமமான சக்தியுடன் ஏற்பட்ட தாக்கத்தால், நிலவின் மேற்பரப்பில் இருந்து தூசிகளும் பாறைத் துகள்களும் விண்வெளியில் சிதறியுள்ளன.

நிலவில் விழுந்து நொறுங்கிய SpaceX ராக்கெட்: 8,690 கி.மீ வேக மோதலால் உருவான புதிய பள்ளம்! | Spacex Rocket Crashes Into Moon Creates New Crater

இந்தச் சம்பவம் பூமிக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை என்று நாசா உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், செயற்கை விண்வெளிப் பொருட்கள் நிலவில் மோதும் போது ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்ய விஞ்ஞானிகளுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

நாசாவின் ‘லூனார் ரீகானைசன்ஸ் ஆர்பிட்டர்’ செயற்கைக்கோள் மூலம் உருவான புதிய பள்ளம் மற்றும் நிலவின் மேற்பரப்பு மாற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button