உலகம்

பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் அவசர ஆலோசனை

பிரதமர் நரேந்​திர மோடியை இஸ்​ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்​கிய ஆலோ​சனை மேற்​கொண்​டார்.

இந்த உரை​யாடலின் போது, இந்​தியா – இஸ்​ரேல் இடையி​லான முக்​கிய கூட்​டாண்​மையை ஆய்வு செய்த இரு தலை​வர்​களும், பல்​வேறு துறை​களில் இருதரப்பு உறவை மேலும் வலுப்​படுத்த உறு​தி​யேற்​றனர்.

மேற்கு ஆசிய போர் சூழல் குறித்​துப் பேசிய இரு தலை​வர்​களும், தொடர்ந்து தொடர்​பில் இருப்​பது என முடிவு செய்​தனர்.

கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்காவும் இஸ்​ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்​திய தாக்​குதல்​களு​டன் தொடங்​கிய இந்​தப் போர், ஐந்து மாதங்​களுக்​கும் மேலாகத் தீர்​வின்றி நீடித்து வரு​கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button