உலகம்

பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத் தாக்குதல் ; 14 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள காபல் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (2) நடைபெற்ற அமைதிப் பேரணியில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலில் ஒரு குழந்தை, பொதுமக்களில் 3 பேர், அதிகாரி ஒருவர், 5 பொலிஸார் உட்பட 14 பேர் உயிரிழந்ததோடு 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என்பதை வலியுறுத்தி, பொலிஸாரின் அசமந்தப் போக்கை கண்டித்தும் இந்த பேரணி நடத்தப்பட்டது.

இதுவரை இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு குழுவோ அல்லது நபரோ பொறுப்பேற்காத நிலையில், அங்கு பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button