இலங்கை

யாழில் ஒரே நேரத்தில் தவறான முடிவெடுத்து உயிர்களை மாய்த்த இரட்டை சகோதரிகள்

யாழ்ப்பாணத்தில் 18 வயதுடைய இரட்டை சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இரட்டை சகோதரிகள் தமக்கு தாமே தீ வைத்து உயிரைமாய்க்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து இருவரையும் மீட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி இருவரும் சனிக்கிழமை (01) அதிகாலை உயிரிழந்துள்ளனர்.

“வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால்..” இவ்வாறு செய்ததாக அவர்கள் உயிரிழப்பதற்கு முன்னர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button