ஜப்பானிய யென்னின் மதிப்பு கூடுவதற்கு அமெரிக்கா பங்களிப்பு

சர்வதேச சந்தையில் ஜப்பான் யென்னின் மதிப்பு கூடுவதற்கு அமெரிக்க கணிசமாக பங்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், ஜப்பானுடனான நட்பின் அடையாளமாகவும், உலகப் பொருளாதாரத்திற்கு உதவுவதற்காகவும், யென்னின் மதிப்பு கூடுவதற்கு அமெரிக்கா கைக்கோர்த்ததாக தெரிவித்துள்ளார்.
“அவர்கள் சிறிதளவு உதவியை விரும்பினார்கள், நாங்கள் எப்போதும் ஜப்பானுக்குத் துணையாக இருப்போம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நிச்சயமாக பேர்ல் ஹார்பர் சம்பவத்தைத் தவிர, ஜப்பான் எப்போதும் எங்களுக்கு மிகவும் நல்லதாகவே இருந்துள்ளது எனக் கூறிய ட்ரம்ப் அது நட்பின் சமிக்ஞையாக இருந்து வருவதாக தெரிவித்தார்.
இருப்பினும் ட்ரம்பின் கருத்துக்களுக்கு பின் அமெரிக்க டொலருக்கு நிகரான யென்னின் பெறுமதி சிறிதளவு சரிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
யென் நாணயத்தை வலுப்படுத்துவதற்காக, ஜப்பானின் நிதி அமைச்சகமும் அமெரிக்காவின் கருவூலத் துறையும் பல பத்தாண்டுகளில் காணப்படாத அளவிற்கு தற்போது இணைந்து செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
![]()