உலகம்

ஐரோப்பாவின் பல பகுதிகளில் நடைபெறும் பிரைட் (Pride) நிகழ்வுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

ஜெர்மனியின் (Germany) தலைநகர் பெர்லினில் (Berlin) நடைபெற்ற பிரைட் (Pride) நிகழ்வில் தாக்குதல் நடத்தப்பட்ட ஒரு வாரத்துக்குப் பின்னர், இங்கிலாந்து (England) மற்றும் ஐரோப்பாவின் (Europe) பல பகுதிகளில் நடைபெற்ற பிரைட் நிகழ்வுகளில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இரவு பெர்லினில் (Berlin) பிரைட் (Pride) அணிவகுப்பு நடைபெற்ற போது, கூட்டத்தினர் மீது வேன்ஒன்று மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், 29 பேர் காயமடைந்தனர்.

இதன்பின்னர், தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர், பலரை கத்தியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

ஜெர்மனை சேர்ந்த (German)21 வயதான அப்துல் பல்லவுட் (Abdul Pallout) என்பவரே சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலில் அந்த இளைஞன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்தின் (England) பிரைட்டன் (Brighton) நகரில் மிகப்பெரிய பிரைட் (Pride) திருவிழா இந்த வார இறுதியில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில் நடைபெறும் அணிவகுப்பை சுமார் மூன்று லட்சம் பேர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெர்லின் (Berlin) தாக்குதலுக்குப் பின்னரும், மக்கள் அச்சமின்றி பிரைட் (Pride) நிகழ்வுகளில் கலந்து கொண்டு, எல்ஜிபிடி பிளஸ் (LGBT+) சமூகத்தினருக்கு தங்களது ஆதரவையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button