உலகம்

ஹார்முஸில் பதற்றம் ; எரிவாயு கொண்டு சென்ற கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்

அமெரிக்கா – ஈரான் இடையே நாளுக்கு நாள் போரின் தீவிரம் அதிகரித்து வரும் சூழலில் மத்திய கிழக்கில் இருந்து பிற நாடுகளுக்கு முக்கிய ஏற்றுமதி பாதையாக இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் கத்தாரில் இருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) ஏற்றிச் சென்ற கேஸ்லாக் ஷாங்காய் என்ற டேங்கர் கப்பல், ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும்போது ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.

கிரீஸ் நாட்டை சேர்ந்த நிறுவனமொன்றுக்கு சொந்தமானது இக்கப்பல். கப்பல் ஏவுகணையால் தாக்கப்பட்டதை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இதில் யாரும் காயமடையவில்லை என்றும் கப்பலில் ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டது என்றும் அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.

இந்த வார தொடக்கத்தில், புதன் அன்று, கேஸ்லாக் நிறுவனத்தினுடைய கேஸ்லாக் சேலம் என்ற மற்றொரு எல்என்ஜி கப்பல் எகிப்து துறைமுகத்தின் வடக்கே Damietta என்ற இடத்தில் வைத்து தாக்குதலுக்கு உள்ளானது. இந்த தாக்குதலுக்கும் யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button