உலகம்

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்? ஈரானுக்கு எதிராக டிரம்பின் அதிரடி திட்டம்!

ஈரானுக்கு எதிராக மீண்டும் பாரிய தாக்குதல்களை நடத்தத் தாம் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகளுக்கு ஈரானிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, ஈரானுக்கு எதிராகப் புதிய தாக்குதலைத் தொடங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது இராணுவத்திற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செய்திசேவை

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், “நாங்கள் அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்குவோம்.. ஒரு கட்டத்தில் அவர்களால் இதை இனி தாங்க முடியாது என்று அவர்களே கூறுவார்கள்..” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற எரிசக்தி வசதிகளை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்துவதில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் போர்க் குற்றங்களின் கீழ் வரக்கூடும் என மனித உரிமைகள் மற்றும் ஆலோசனை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button