பலதும் பத்தும்

நகத்தில் கருப்பு கோடு; அரிதான புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறியா?

உலகளவில் இதய நோயும் புற்றுநோயும் அதிக உயிரிழப்புகளுக்கு காரணமாக உள்ளன. மருத்துவம் முன்னேறியிருந்தாலும், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியாமல் இருப்பதே பலரின் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாகிறது.

இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களால் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அவற்றில் சில, ஆபத்தான நோய்களின் ஆரம்ப அறிகுறிகளாகவும் இருக்கலாம். ஆனால், சாதாரண பிரச்சனைகளாக நினைத்து பலர் அவற்றை புறக்கணிக்கிறார்கள்.

அமெரிக்க தோல் மருத்துவர் Dr. Lindsey Zubritsky, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அரிதான ஆனால் ஆபத்தான சப்யூங்குவல் மெலனோமா (Subungual Melanoma) என்ற தோல் புற்றுநோய் குறித்து எச்சரித்துள்ளார்.

தோல் புற்றுநோய் அறிகுறியா? 

 

அதாவது விரல் நகங்களில் கருமையான கோடு தெரிந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அது ஒரு வகையான சரும புற்றுநோயான சப்யூங்குவல் மெலனோமாவின் அறிகுறியாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிகுறியை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே அதை கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

நகத்தில் கருப்பு கோடு... அரிதான புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறியா? | Beware Dark Vertical Line On Nails Skin Cancer

 

ஆனால் எல்லா கோடுகளும் புற்றுநோயின் அறிகுறி அல்ல. சில சமயங்களில் நகத்தில் பலமாக அடிப்படும் போதும் இவ்வாறு ஏற்படலாம். அப்படி வேறு காரணங்களால் ஏற்படும் கோடு பொதுவாக நகம் வளர வளர தானாகவே மறைந்து விடும்.

முக்கிய அறிகுறிகள்

 

ஆனால், கருப்பு கோடு நீண்ட நாட்களாக மறையாமல் இருப்பது, மெதுவாக அகலமாவது, நகத்தைச் சுற்றிய தோல் கருமையாக மாறுவது, நகம் பிளவுபடுவது, இரத்தக்கசிவு, வலி, வீக்கம் அல்லது நகம் நகப்படுக்கையிலிருந்து பிரிவது போன்ற அறிகுறிகள் இருந்தால், அதை அலட்சியப்படுத்தக் கூடாது.

நகத்தில் கருப்பு கோடு... அரிதான புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறியா? | Beware Dark Vertical Line On Nails Skin Cancer

இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தோல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து, தேவையான சிகிச்சையைப் பெறுவது மிகவும் அவசியம். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சை பலனளிக்கும் வாய்ப்பு அதிகம். எனவே இந்த விடயம் குறித்து விழிவுடன் இருப்பது அவசியம் என அமெரிக்க தோல் மருத்துவர் Dr. Lindsey Zubritsky எச்சரித்துள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button