உலகம்

ஈரானிய கப்பல் மீது தாக்குதல் ; உக்ரைனுக்கு ஈரான் கடும் கண்டனம்

ஈரானிய வணிகக் கப்பல் மீது உக்ரைன் இராணுவம் கஸ்பியன் கடலில் மேற்கொண்ட தாக்குதலை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கடுமையாகக் கண்டித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறைக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸுடன் தொலைபேசியில் உரையாடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

ஈரானிய கப்பல் மீது தாக்குதல் ; உக்ரைனுக்கு ஈரான் கடும் கண்டனம் | Iran Strongly Condemns Ukraine Attack Iranian Ship

இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மற்றும் இதற்கு ஆதரவளித்தவர்கள் மீது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச சமூகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதேவேளை, ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்களுக்கு ‘இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை’ (IRGC) அளித்த இராணுவப் பதிலடியைத் தொடர்ந்து, ஹோர்மூஸ் நீரிணையில் நிலவும் பதற்றத்தைக் குறைப்பதற்கு இராஜதந்திர முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button