இலங்கை

நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு: கஜேந்திரகுமார் ஆதரவாக வாக்களிப்பு

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்றத்தில்  தோற்கடிக்கப்பட்டது.

இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 36 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 152 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டே நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டது.

எதிரணியிலுள்ள மலையக தமிழ் எம்.பிக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button