உலகம்

செப்டம்பர் மாதம் டிரம்ப் அரசாங்கம் முடங்கும் அபாயம் !

அமெரிக்காவில் வரும் செப்டம்பர் மாதம் அரசாங்கம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிதிச் செலவினங்கள் தொடர்பான மசோதாக்கள் மீது குடியரசு கட்சியினருக்கும் ஜனநாயக கட்சியினருக்கும் இடையே நாடாளுமன்றத்தில் கடும் கருத்து வேறுபாடுகளும் முட்டுக்கட்டைகளும் நீடித்து வருவதால் இந்தச் சூழல் உருவாகியுள்ளதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

மனநிலை சரியில்லாதவர்கள்…

இந்த விவகாரத்தில் அரசு செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர்களை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.

அவர்களை ‘மனநிலை சரியில்லாதவர்கள்’ என்று கடுமையான வார்த்தைகளால் டிரம்ப், விமர்சித்துள்ளதும் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இரு கட்சிகளுக்கும் இடையேயான இந்த மோதல் நீண்ட காலமாக நீடித்து வருவதால், அமெரிக்க அரசின் நிதி நிலைப்பாடு மற்றும் நிர்வாக பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.

ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒருமித்த முடிவுக்கு வராத வரை இந்த முடக்கம் தவிர்க்க முடியாததாக மாறும் சூழல் நிலவுவதால், அமெரிக்க அரசியல் களம் தற்போது மிகுந்த பதற்றத்துடன் காணப்படுகிறது.

உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவிலேயே அரசாங்கம் முடங்கும் சூழல் உருவாகியுள்ளதால், அது சர்வதேச பொருளாதாரத்திலும் பங்குச் சந்தைகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button