உலகம்

பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் குடிநீர் விநியோகத்தில் சிக்கல் – 7000 வீடுகள் பாதிப்பு

பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக சுமார் 7,000 வீடுகளில் குறைந்த அழுத்த நீர், விட்டுவிட்டு வரும் நீர் விநியோகம் அல்லது தண்ணீர் இல்லாமை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்ளூர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட கருவி கோளாறு காரணமாக இந்நிலை ஏற்பட்டதாக சவுத் ஈஸ்ட் வாட்டர் (SEW) நிறுவனம் கூறியதுடன், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளது.

எவ்வாறாயினும் இன்று மாலைக்குள் நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் சில இடங்களில் டேங்கர்கள் மற்றும் போத்தல்கள் மூலம் நீர்விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button