முச்சந்தி

நீதிமன்ற உத்தரவு: ரகித, சரித் உள்ளிட்ட மூவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஹொரணை தொகுதி அமைப்பாளராகச் செயற்பட்ட சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான அருண வருணஹெந்திகே ஆகிய மூவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று (17) முற்பகல் குறித்த சந்தேகநபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button