உலகம்

இந்தியா – இஸ்ரேல் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் அமுலுக்கு

இந்தியா – இஸ்ரேல் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் (BIA) இன்று, ஜூலை 4 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 செப்டம்பர் 8 ஆம் திகதியன்று கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், அரசாங்கங்களுக்கு கொள்கை ரீதியிலான நெகிழ்வுத்தன்மையை வழங்கும் அதேவேளையில், முதலீட்டாளர்களுக்கு வலுவான பாதுகாப்பை வழங்குவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது எல்லை கடந்த முதலீட்டு நடவடிக்கைகளை அதிகரிக்கும் என்றும், இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான பொருளாதார கூட்டாண்மையை மேலும் ஆழமாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் மற்றும் லெபனான் மீது அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது.

தற்போது இடைக்கால போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்று அமுலாகியுள்ள போதிலும், இஸ்ரேல் சில சந்தர்ப்பங்களில் தாக்குதல் நடத்தியிருந்து.

இதனால் சர்வதேச ரீதியில் இஸ்ரேல் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான சூழலில் இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையேயான முதலீட்டு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளமையினால் இது சர்வதேச கவனத்திற்கு வந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button