உலகம்

அமெரிக்காவின் அமைதி மற்றும் ஒற்றுமைக்கான அழைப்பு: போப் லியோ முக்கிய அறிவுரை

அமெரிக்கா அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சிறப்பாக முன்னெடுத்திட வேண்டும் என்று போப் லியோ குறிப்பிட்டுள்ளார்.

போப் லியோ வழங்கிய முக்கிய அறிவுரை

போப் லியோ XIV வெள்ளிக்கிழமை பிலடெல்பியா(Philadelphia) மக்களுக்கு வீடியோ வாயிலாக செய்தி ஒன்றை அறிவித்தார்.

அதில் அமெரிக்காவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட  முதல் போப் என்ற பெருமையை பெற்ற போப் லியோ, நாட்டின் விழுமியங்களை ஒரு முறை நினைவு கூற வேண்டும் என்று தெரிவித்தார்.

அமெரிக்காவின் சுதந்திர தினத்தை குறிப்பிட்டு பேசிய உரையில், தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஸ்திரத்தன்மை இருக்க வேண்டும் என்றும் போப் லியோ தெரிவித்தார்.

உலக அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அடிப்படையிலேயே உள்நாட்டு ஸ்திரத்தன்மை அமையும் என்று பேசிய போப், அமெரிக்கர்கள் அனைவரும் பொதுவான புரிதல் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

பொது விவாதங்கள் எப்போதும் மிதமானதாகவும், மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்தும் இருக்க வேண்டும் என்றும் போப் லியோ அறிவுறுத்தியுள்ளார்.

உண்மையான சுதந்திரம்

உண்மையான சுதந்திரம் என்பது தங்களுக்கு தோன்றியதை அதன்படி செய்து மட்டுமல்ல, உண்மைகளை அறிந்து நன்மையானவற்றை பின்பற்றி வாழ்வதே சுதந்திரம் என்று போப் லியோ XIV விளக்கியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button