உலகம்

வெனிசுலா நிலநடுக்கம்; பிரபல கால்பந்து வீரரின் மனைவியின் கண் கலங்க வைத்த இறுதி நொடி

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வெனிசுலா நாட்டின் பிரபல கால்பந்து வீரர் ஹெக்டர் பிலோவின் மனைவி அண்ட்ரியா தனது ஒரு வயது மகள் அலனாவை பத்திரமாகப் காப்பாற்றிய நிலையில், உயிரிழந்துள்ளார்.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 ஆக பதிவான அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.

மேலும்,நிலநடுக்கத்தில் கால்பந்து வீரர் ஹெக்டர் பிலோவின் வீடு இடிந்து விழுந்தது.

அப்போது வீட்டில் இருந்த அவரது மனைவி அண்ட்ரியா, தனது 1 வயது மகள் அலனாவை பத்திரமாகப் பாதுகாத்துள்ளார்.

இந்நிலையில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய குழந்தை அலனா உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், அவளைக் காத்த தாய் அண்ட்ரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார;

தன்னுடைய உயிரைக் கொடுத்து மகளைக் காப்பாற்றிய இந்தத் தாயின் தியாகம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button