கவிதைகள்
மனம் வலிக்கிறது மறைவு கண்டு!… கவிதை… சங்கர சுப்பிரமணியன்

சின்னஞ் சிறு வயது நட்பும் அல்ல
என்னுள் தோன்றிய எதிர்பாராதது
வெங்கல குரலில் கவிதை சொல்லி
எங்களை ஈர்த்த இனிய நண்பரவர்
இலக்கிய கலை சங்கப் பயணமும்
இலக்கில்லை என்று மறைந்தீரோ
உலகை வலம்வந்த உயர்கல்விமான்
உலகில் இல்லை கண்ணீர் வடிகிறது
நகைச்சுவை மிகுந்த அவர் பேச்சும்
வகைவகையாய் செவிக்குணவாகும்
நகையறு முகமாய் எமையுமாயாக்கி
தகையிலவென தனியிடம் சென்றீரா
நேற்று முன் தினமன்றோ கதைத்தீர்
கூற்றுவன் வருவதை அறிந்திலையா
ஆற்றொனாத் துயரில் எமை யாழ்த்தி
வேற்றுலகு செல்வீரென அறிந்திலனே
இன்னல் நிறை இவ்வுலகு வேண்டாமென
கன்னல் சுவை நாடி கனதூரம் சென்றீரோ
என்னுள் தோன்றியெழும் துயரம் யாவுமே
தன்னில் இருந்தார் தகைசார்ந்தார் கண்!

![]()