நாளை வியாழக்கிழமை; வட மாகாண வேலையில்லாப் பட்டதாரிகள் யாழ்; மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்

வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் இணைந்து எதிர்வரும் வியாழக்கிழமை யாழ் மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்க செயலாளர் ஜேம்ஸ் கபில்டன் போல் தெரிவித்தார்.
போராட்டம் தொடர்பான அறிவிப்பு யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் குறித்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் வேலைவாய்பு போட்டி பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். அத்தோடு வடமாகாணத்தில் பல வேலை வாய்ப்பு வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் அவற்றுக்கு பட்டதாரிகளை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க வேண்டும். வடக்கு மாகாணத்தில் உள்ள அரச வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் காணப்படுகிறது. அதற்கு வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகளை உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரச வேலைவாய்ப்போ தனியார் வேலைவாய்ப்போ அதனை பெற்றுத்தர அரசாங்கம் நடவடிக்கை வேண்டும்.பல பெண்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர். அரசாங்கம் ஏமாற்று வேலைகளை விட்டு உறுதியான வேலை வாய்ப்பை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதனால் வேலை வாய்ப்பு கோரி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக வியாழக்கிழமை காலை 9 மணிக்கு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். தீர்வுகள் கிடைக்க பெறாமல்விடின் எதிர்காலத்தில் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிப்போம் – என்றார்.
![]()